ஆதித்யா எல்1 விண்கலம் - விண்ணில் ஏவுவதற்கான கவுன்டவுன் தொடக்கம்...!

ஆதித்யா எல்1 விண்கலம் - விண்ணில் ஏவுவதற்கான கவுன்டவுன் தொடக்கம்...!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுன்டவுனை இஸ்ரோ தொடங்கியது.

சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல்நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு இஸ்ரோ பெற்றுத் தந்தது. இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலத்தை, நாளை காலை 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ஏவுகிறது.

இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள விண்கலத்தின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேர கவுண்ட்வுனை  இஸ்ரோ தொடங்கியது. முன்னதாக  பணி வெற்றிகரமாக நிறைவடைய வேண்டி, விண்கல மாதிரியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

PSLV -C57 ராக்கெட் மூலம் 475 கிலோ எடைகொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, 40 நாட்கள் பயணித்து பூமியில் இருந்து ஒன்றரை மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை உள்ளிட்ட சூரியக்குடும்பம் தொடர்பான ரகசியங்களை ஆதித்யா எல்.1 வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com