Meta-வில் என்ன மாதிரியான Content-ஸ் பதிவிட்டால் Violation ஏற்படும்? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Meta-வில் பல வகையான Contentகள் விதிமீறலாகக் கருதப்படுகின்றன. ..
contents thet voilates meta rule
contents thet voilates meta rule
Published on
Updated on
2 min read

Meta-வின் பிளாட்ஃபார்ம்களான Facebook, Instagram, WhatsApp, Threads-ல் உள்ள Community Standards-ஐ மீறும் Content-களைப் பதிவிடுவது Content Violation-ஆக கருதப்படும்.

Meta-வின் Community Standards என்றால் என்ன?

Meta-வின் Community Standards என்பது Facebook, Instagram, Threads போன்ற பிளாட்ஃபார்ம்களில் என்ன மாதிரியான Contents அனுமதிக்கப்படும், எவை தடை செய்யப்படும் என்பதை வரையறுக்கும் விதிமுறைகள். இவை பயனர்களின் பாதுகாப்பு, தனியுரிமை, மற்றும் சமூக ஒழுங்கை உறுதி செய்ய உருவாக்கப்பட்டவை. இந்த விதிகளை மீறினால், உள்ளடக்கம் நீக்கப்படுவது முதல் கணக்கு முடக்கம் வரை பல பாதிப்புகள் ஏற்படலாம்.

எந்த மாதிரியான Content-ஸ் மீறலாகக் கருதப்படும்?

Meta-வில் பல வகையான Contentகள் விதிமீறலாகக் கருதப்படுகின்றன. அவற்றில், முக்கியமானவற்றைப் பார்க்கலாம்:

வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கம்:

வன்முறையை ஊக்குவிக்கும், அச்சுறுத்தும் அல்லது வன்முறையை புகழ்ந்து பேசும் உள்ளடக்கங்கள். உதாரணமாக, ஒரு குழுவைத் தாக்குவது பற்றிய பதிவுகள்.

ஆயுதம், தீவிரவாதம், அல்லது குற்றச் செயல்களை ஆதரிக்கும் உள்ளடக்கங்கள்.

வெறுப்பு பேச்சு (Hate Speech):

மதம், இனம், பாலினம், பாலியல் நோக்கு, தேசியம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு குழுவை இழிவுபடுத்தும், தாக்கும் உள்ளடக்கங்கள்.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுவது.

பாலியல் உள்ளடக்கம்:

நிர்வாணப் படங்கள், ஆபாச உள்ளடக்கம், அல்லது பாலியல் தொடர்பான வெளிப்படையான உள்ளடக்கங்கள்.

பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் பதிவுகள்.

பதிப்புரிமை மீறல் (Copyright Infringement):

மற்றவர்களின் உள்ளடக்கத்தை அனுமதியின்றி பகிர்வது. உதாரணமாக, பாடல்கள், வீடியோக்கள், படங்கள்.

இது பெரும்பாலும் Content Creators-ஐ பாதிக்கும்.

தவறான தகவல் (Misinformation):

தவறான அல்லது ஏமாற்றும் தகவல்களைப் பரப்புவது.

2025-ல் Meta தவறான தகவல் குறித்து மூன்றாம் தரப்பு Fact-Checking-ஐ நிறுத்திவிட்டு, Community Notes முறைக்கு மாறியுள்ளது.

தனியுரிமை மீறல்:

மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை (போன் நம்பர், முகவரி) அனுமதியின்றி பகிர்வது.

உதாரணமாக, ஒருவரின் புகைப்படத்தை அவர்கள் அனுமதியின்றி பதிவிடுவது.

ஏமாற்றும் Contents (Scams/Fraud):

மோசடி விளம்பரங்கள், ஏமாற்று நிதி திட்டங்கள், அல்லது தவறான வணிகம் சார்ந்த விளம்பரங்கள்

இது Meta Business Suite-ஐ பயன்படுத்துவோரை பெரிதும் பாதிக்கிறது.

மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்:

ஒருவரை மிரட்டுவது, துன்புறுத்துவது, அல்லது Bullying செய்யும் உள்ளடக்கங்கள்.

அசல் இல்லாத உள்ளடக்கம் (Unoriginal Content):

மற்ற சமூக ஊடகங்களில் இருந்து நேரடியாக நகலெடுத்து பதிவிடுவது. இது Content Creators-இன் Monetization-ஐ பாதிக்கலாம்.

Content Violations-ஆல் ஏற்படும் பாதிப்புகள்

Meta-வின் விதிமுறைகளை மீறினால், பலவிதமான பாதிப்புகள் ஏற்படலாம். இவை உள்ளடக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்:

விதிமுறைகளை மீறும் Contents உடனடியாக நீக்கப்படும். பயனர் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.

கணக்கு கட்டுப்பாடு:

தற்காலிகமாக கணக்கு முடக்கப்படலாம். இதனால் பதிவிடுதல், கருத்து தெரிவித்தல், அல்லது Like செய்ய முடியாது. வணிக பக்கங்களை நிர்வகிப்பவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

விளம்பரத் தடை:

விளம்பரங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது விளம்பரக் கணக்கு முடக்கப்படலாம். இது வணிகங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

Monetization இழப்பு:

Content Creators-கு, Unoriginal Content அல்லது மீறல்கள் 90 நாட்கள் Monetization தடையை ஏற்படுத்தலாம்.

நிரந்தர கணக்கு முடக்கம்:

பலமுறை மீறல்கள் ஏற்பட்டால், கணக்கு நிரந்தரமாக முடக்கப்படலாம். இதனால் தரவுகளை மீட்க முடியாது.

சட்டப்பூர்வ பாதிப்புகள்:

தனியுரிமை மீறல்கள் அல்லது மோசடி உள்ளடக்கங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். உதாரணமாக, EU-வின் Digital Markets Act-ஐ மீறியதற்காக Meta-வுக்கு 2025-ல் 200 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

மோசடி மற்றும் Phishing முயற்சிகள்

Meta-வின் பெயரில் மோசடி மின்னஞ்சல்கள், Messages அனுப்பப்படுவது பொதுவானது. இவை “உங்கள் கணக்கு முடக்கப்படும்” என்று மிரட்டி, தனிப்பட்ட தகவல்களைத் திருட முயல்கின்றன. இவற்றை அடையாளம் காண சில வழிகள்:

அதிகாரப்பூர்வ தொடர்பு: Meta ஆனது மீறல்கள் குறித்து Business Suite அல்லது Notifications மூலமாகவே தொடர்பு கொள்ளும். மின்னஞ்சல் அல்லது Messenger-ல் வரும் இணைப்புகளை சந்தேகிக்கவும்.

URL சரிபார்ப்பு: இணைப்புகள் facebook.com அல்லது meta.com-இல் தொடங்கவில்லை என்றால், அது மோசடியாக இருக்கலாம்.

எழுத்து பிழைகள்: மோசடி மின்னஞ்சல்களில் பொதுவாக எழுத்து பிழைகள் இருக்கும்.

மீறல்களைத் தவிர்ப்பது எப்படி?

விதிமுறைகளைப் படிக்கவும்: Meta-வின் Community Standards மற்றும் Advertising Policies-ஐ முழுமையாகப் புரிந்து கொள்ளவும். அதேபோல், எப்போதும் ஒரிஜினல் Content-ஐ உருவாக்கவும். மற்றவர்களின் Content-ஐ பகிர்ந்தால், அனுமதி பெறவும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com