“லேப்டாப் வாங்குறீங்களா?” Processor, RAM மட்டும் பார்த்தா போதாது.. இந்த 5 விஷயங்களையும் கவனிங்க!

கணினி சாதனங்கள் நீண்ட கால பயன்பாட்டைத் தாங்கும் வகையில் இருக்க வேண்டியது என்பது அவசியமாகிறது.
laptop buying guide 2026
laptop buying guide 2026
Published on
Updated on
3 min read

கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும்பாலான காலகட்டங்களில், ஒரு நிறுவனத்தின் பணிக்கான லேப்டாப் ஊழியரின் மேசையிலேயே இருந்துதான் நாம் பார்த்திருக்கிறோம். அந்த லேப்டாப் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வது என்பது அரிதினும் அரிதான காரியம். ஆனால், இன்றைய சூழலில் அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. Gallup நிறுவனத்தின் தரவுகளின்படி, தற்போது 78 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தொலைதூரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது Work from home முறையை பின்பற்றுகின்றனர்.

Gartner நிறுவனத்தின் கணிப்பின்படி, செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளைவிட தங்களிடம் உள்ள கணினி சாதனங்களை சுமார் 15 சதவீதம் கூடுதலான காலம் பயன்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMBs) தற்போது வாங்கும் கணினி சாதனங்கள் நீண்ட கால பயன்பாட்டைத் தாங்கும் வகையில் இருக்க வேண்டியது என்பது அவசியமாகிறது.

அதேபோல், 2026-ம் ஆண்டில் உலகளவில் விற்பனையாகும் கணினிகளில் பாதிக்கும் மேற்பட்டவை AI வசதி கொண்ட கணினிகளாக (AI PCs) இருக்கும் என்றும் Gartner கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், லேப்டாப் போன்றவற்றில் நேரடியாக மேற்கொள்ளப்படும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளுக்குத் தேவையான அதிக செயலாக்கத் திறனுடன், நீடித்த உழைப்புத் திறனும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பும் இணைந்து இருப்பது என்பது தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒரு நிலையான அலுவலக மேசைப் பணிக்காக வடிவமைக்கப்பட்ட லேப்டாப் ள்ளது கணினி, தொடர்ந்து இடம் மாறிப் பயன்படுத்தப்படும் சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருக்காது. எனவே, அடுத்தகட்டமாக கணினி சாதனங்களை வாங்கும் சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், வழக்கமான அம்சங்களை மட்டுமல்லாமல் வேறு சில முக்கிய அம்சங்களிலும் தனகது கவனத்தை கொண்டுசெல்வர். அதற்காக அடுத்த முறை லேப்டாப் வாங்குவதற்கு முன் மதிப்பீடு செய்ய வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள் பற்றி இதில் ஒரு பார்வை பார்க்கலாம்.

சக்திவாய்ந்த செயலாக்கத் திறன்: பொதுவாக உங்கள் லேப்டாப்பில் எத்தனை செயலிகள் மற்றும் பிரவுசர் விண்டோக்களைத் திறந்து வைத்திருப்பீர்கள்? பெரும்பாலும், அது நிறைய எண்ணிக்கைகளை கொண்டிருக்கலாம். ஒவ்வ்ருவரின் வேலையை பொறுத்து. ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவதற்கு சக்திவாய்ந்த செயலி என்பது மிகவும் அவசியம். இல்லையெனில், செய்யும் வேளையில் தாமதமும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் மந்தநிலையும் ஏற்படலாம்.

உள்ளமைக்கப்பட்ட உறுதித்தன்மை: பயணத்தின்போது பயன்படுத்தப்படும் லேப்டாப்கள் கீழே விழலாம், பல்வேறு அதிர்வுகளுக்கு உள்ளாகலாம் அல்லது சில நேரங்களில் காபி போன்ற பானங்களும் அதில் சிந்திவிடலாம். இது குறித்து ASUS Future of SMB Report அறிக்கையின்படி, 10 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 8 நிறுவனங்கள், தங்களது ஊழியர்களில் குறைந்தபட்சம் சிலர் தங்களது சாதனங்களை கீழே போடுவதாகவோ அல்லது கவனக்குறைவாகக் கையாள்வதாகவோ தெரிவிக்கின்றன. மேலும், நான்கில் ஒரு நிறுவனம் வன்பொருள் கோளாறுகளால் அடிக்கடி குறிப்பிடத்தக்க பணிநேர இழப்பை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கூடுதல் வசதிகளாகக் கருதப்பட்ட வலுவூட்டப்பட்ட லேப்டாப் அமைப்பு, திரவம் ஏதேனும் சித்தினாலும் அதனை தாங்கும் கீபோர்டு, அதிக வெப்பநிலை மற்றும் தாக்கங்களைத் தாங்கும் வகையில் மதிப்பிடப்பட்ட உதிரிபாகங்கள் போன்ற அம்சங்கள், தற்போது அனைத்து வணிக லேப்டாப்களிலும் அடிப்படை அம்சங்களாகக் கருதப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டது.

மேலும், அலுவலகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் லேப்டாப்கள் பல்வேறு மானிட்டர்கள் மற்றும் பிற சாதனங்களுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு, பின்னர் துண்டிக்கப்படும். சிறிதளவு பயன்பாட்டிலேயே பழுதாகிவிடும் போர்ட்கள், தொழில்நுட்ப ஆதரவு தொடர்பான பெரிய சிக்கல்களை இது ஏற்படுத்தக்கூடும். எனவே, அடிக்கடி இணைத்து, துண்டிப்பதைத் தாங்கும் வகையில் வலுவான இணைப்பு போர்ட்கள் கொண்ட லேப்டாப்களைத் தேர்வு செய்வது என்பது மிகவும் அவசியம்.

பயணத்தின்போது பணியாற்றுவதற்கான பேட்டரி திறன்: காபி கடைகள், ரயில்கள் மற்றும் பகிரப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எப்போதும் அருகில் மின்சார இணைப்பு கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே, லேப்டாப் பேட்டரி சில மணி நேரங்களுக்கு மட்டுமல்லாமல், ஒரு முழு நாள் வரை பணியைத் தாங்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

எடை குறைந்த வடிவமைப்பு: கனமான லேப்டாப்பை எடுத்துச் செல்வதை யாரும் விரும்புவதில்லை. குறிப்பாக, தங்களது லேப்டாப்புடன் அடிக்கடி பயணம் செய்யும் ஊழியர்களுக்கு இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். அது தேவையில்லாத உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். எனவே, பல்வேறு தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் லேப்டாப்புகளுக்கு எடை குறைந்த வடிவமைப்பு என்பது அவசியமான அம்சமாகும்.

வசதியான பயன்பாட்டிற்கான டிஸ்ப்ளே: தற்போது ஊழியர்கள் அலுவலக விளக்குகள், வீட்டின் விளக்குகள், இயற்கையான வெளிச்சம் என பல்வேறு சூழல்களில் பணியாற்றுகின்றனர். அதிக வெளிச்சம், சிறந்த கான்ட்ராஸ்ட் மற்றும் துல்லியமான வண்ணங்களைக் கொண்ட டிஸ்ப்ளே, வெவ்வேறு வெளிச்சச் சூழல்களிலும் கண் சோர்வைக் குறைத்து, கண் பாதிப்பினை குறைத்து நாள் முழுவதும் ஊழியர்கள் திறம்பட பணியாற்ற உதவும்.

இது போன்ற இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் ASUS ExpertBook Ultra வடிவமைக்கப்பட்டுள்ளது. மெக்னீசியம்-அலுமினியம் கலவையால் உருவாக்கப்பட்ட இதன் உடல் அமைப்பு, அன்றாட பயன்பாட்டால் ஏற்படும் தேய்மானம் மற்றும் சேதங்களுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. சிறிய உயரத்திலிருந்து கீழே விழுவது அல்லது ஏதேனும் பானம் சிந்துவது போன்ற எதிர்பாராத சம்பவங்களையும் தாங்கும் அளவுக்கு இது வலுவானது என்று கூறப்படுகிறது.

மேலும், 26 மணி நேர பேட்டரி திறன் மற்றும் வேகமான சார்ஜிங் வசதி இருப்பதால், ஊழியர்கள் மின்சார இணைப்பைத் தேடி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. Intel® Core™ Series 3 processor மூலம் இயக்கப்படும் ExpertBook Ultra, அதிக செயலாக்கத் திறன் தேவைப்படும் பல்வேறு செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கும்போதும் ஹாங் ஆவது போன்ற எந்த ஒரு நிலையும் ஏற்படாமல் நிலையான செயல்திறனை வழங்குவதாக கூறப்படுகிறது.

சரியான லேப்டாப்பைத் தேர்வு செய்வது தற்போது வழக்கமான கொள்முதல் நடவடிக்கையாக இல்லாமல், ஒரு நிறுவனத்தின் முக்கியமான உத்தி சார்ந்த முடிவாக மாறியுள்ளது. நீடித்த பயன்பாடு, எளிதில் எடுத்துச் செல்லும் வசதி மற்றும் கண்களுக்கு வசதியான டிஸ்ப்ளே ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வன்பொருள் தரநிலைகளை உருவாக்கும் சிறு தொழில் நிறுவனங்கள், பழுதடைந்த சாதனங்களை நிர்வகிப்பதில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, தங்கள் ஊழியர்கள் பணியின் தேவைக்கேற்ப எங்கிருந்தும் திறம்பட பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com