பயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என வாட்ஸ்ஆப் அறிவிப்பு.! 

பயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என வாட்ஸ்ஆப் அறிவிப்பு.! 

Published on

தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, தனியுரிமைக் கொள்கை நிறுத்தி வைக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

வாட்ஸ்ஆப்பில் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததிலிருந்தே வாட்ஸ்ஆப்பைச் சுற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜரானார்.  

அப்போது பிரைவசி கொள்கையை தாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம் எனவும் இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் தெளிவுபடுத்தினார். இதனை ஏற்காதவர்களுக்கு வழங்கப்படும் சேவையை குறைக்க மாட்டோம் என தெரிவித்த அவர் தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, தனியுரிமைக் கொள்கை நிறுத்தி வைக்கப்படும் என விளக்கம் அளித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com