
இந்தியா இப்போ உலகத்துலயே மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகையை வச்சிருக்கிற நாடு. ஆனா, இந்த இளைஞர்கள் எல்லாரும் வேலைக்கு தயாரா இருக்காங்களா? குறிப்பா, ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மாதிரியான புது டெக்னாலஜி வேலைகளுக்கு? Google.org மற்றும் Asian Development Bank வெளியிட்ட புது ரிப்போர்ட், ‘AI for All: Building an AI-ready Workforce in Asia-Pacific’ இதைப் பத்தி ஒரு பெரிய விழிப்புணர்வை கொடுக்குது. இந்தியாவுல AI வேலைகள் 2030-ல பல மடங்கு அதிகரிக்கப் போகுது, ஆனா அதுக்கு நம்ம ஆளுங்க தயாராகணும். இல்லைனா, இந்த வாய்ப்பு கையை விட்டு போயிடும்னு எச்சரிக்குது.
இந்த ரிப்போர்ட் சொல்ற முக்கிய விஷயம், 2030-க்குள் AI ஆசிய-பசிஃபிக் பகுதியோட GDP-க்கு $3 ட்ரில்லியன் (ஏறக்குறைய 252 லட்சம் கோடி ரூபாய்) பங்களிக்கப் போகுது. இதுல இந்தியாவோட பங்கு ரொம்ப முக்கியம், காரணம் நம்மளோட இளைஞர் மக்கள் தொகை. ஆனா, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க, இந்தியா உடனே AI ஸ்கில்ஸ் உள்ள வொர்க்ஃபோர்ஸை உருவாக்கணும்.
இப்போ இருக்கிற ஸ்கில்ஸ் மற்றும் எம்ப்ளாயர்ஸ் எதிர்பார்க்கிற ஸ்கில்ஸுக்கு இடையில ஒரு பெரிய கேப் இருக்கு. முன்னாடி ஒரு இன்ஜினியரிங் டிகிரி இருந்தா போதும், ஆனா இப்போ விஷயம் வேற. கிரிடிக்கல் திங்கிங், அடாப்டபிலிட்டி, AI டூல்ஸை எப்படி யூஸ் பண்ணணும்னு தெரிஞ்சவங்களைதான் கம்பெனிகள் தேடுது. சமீபத்தில் வெளியான ரிப்போர்ட்டில், 1.5 மில்லியன் இன்ஜினியரிங் கிராஜுவேட்ஸ்ல 10% பேருக்கு மட்டுமே வேலை கிடைச்சிருப்பது தெரிய வந்துள்ளது. இது இந்த ஸ்கில் கேப்பை காட்டுது.
இந்தியாவுல AI தொழில்நுட்பம் வேகமா வளர்ந்து வருது. 2027-க்குள் AI தொடர்பான 2.3 மில்லியன் வேலைகள் உருவாகலாம்னு Bain & Company-ஓட ரிப்போர்ட் சொல்லுது. ஆனா, இதுக்கு 1.2 மில்லியன் தகுதியான ஆளுங்க மட்டுமே இருப்பாங்க, அதாவது கிட்டத்தட்ட 1 மில்லியன் வேலைகளுக்கு ஆளு கிடைக்காம போகலாம். இந்த இடைவெளியை நிரப்ப, இந்தியா உடனே முயற்சிகளை தீவிரப்படுத்தணும்.
AWS-ஓட 2024 ரிப்போர்ட், AI ஸ்கில்ஸ் உள்ளவங்களுக்கு இந்தியாவுல சம்பளம் 54% வரை உயரலாம், குறிப்பா IT (65%) மற்றும் R&D (62%) துறைகளில். 95% பேர் AI ஸ்கில்ஸ் கத்துக்க ஆர்வமா இருக்காங்க, இது இந்திய இளைஞர்களோட ஆர்வத்தை காட்டுது என்று சொல்லுது
இந்திய அரசாங்கமும் இதை உணர்ந்து, AI-க்கு ஏத்த மாதிரி பல முயற்சிகளை எடுத்துட்டு இருக்கு. 2023-ல மூணு சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் (அக்ரிகல்ச்சர், ஹெல்த்கேர், சஸ்டெய்னபிள் சிட்டிஸ்) அறிவிக்கப்பட்டது. இப்போ 2025-ல, எஜுகேஷனுக்காக ஒரு புது AI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ரூ.500 கோடி செலவுல உருவாக்கப்படுது.
இதோட, ஐந்து நேஷனல் சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் ஸ்கில்லிங், கம்பெனிகளோட கூட்டு சேர்ந்து இளைஞர்களுக்கு AI ஸ்கில்ஸ் கத்துக்கொடுக்க பிளான் பண்ணுது. MeitY-ஓட FutureSkills PRIME ப்ரோக்ராம், 10 எமர்ஜிங் டெக்னாலஜிஸுக்கு ஸ்கில்ஸ் கொடுக்குது. இந்தியாவோட Bhashini ப்ரோக்ராம், 122 மொழிகளுக்கு AI-பேஸ்டு ட்ரான்ஸ்லேஷன் டூல்ஸை உருவாக்குது, இது இந்தியாவோட மொழி வேறுபாட்டை ஒரு பலமா மாற்றுது.
ஆனா, இவ்வளவு முயற்சி இருந்தாலும், சவால்கள் இல்லாம இல்லை. 44% கம்பெனிகள், AI எக்ஸ்பர்ட்டிஸ் இல்லாததால ஜெனரேட்டிவ் AI-ஐ இம்பிளிமென்ட் பண்ண முடியலனு சொல்லுது. டேட்டா செக்யூரிட்டி, ப்ரைவசி, கம்பெனி டேட்டாவோட ஒர்கனைசேஷன் இல்லாமை இவையும் பெரிய தடைகள். இதோட, இந்தியாவோட சர்வீஸ்-டிரிவன் எகானமி, குறிப்பா IT மற்றும் BPO துறைகள், AI ஆட்டோமேஷனால பாதிக்கப்படலாம்.
Economic Survey 2024-25, இந்தியாவோட லோ-ஸ்கில் வேலைகள் AI-க்கு எளிதா ஆட்டோமேட் ஆகலாம், இது மக்கள் தொகையோட எண்ணிக்கையை வச்சு பார்க்கும்போது பெரிய பிரச்சனை. இதை சமாளிக்க, “ஸ்டூவர்டிங் இன்ஸ்டிடியூஷன்ஸ்” உருவாக்கணும்னு சர்வே பரிந்துரைக்குது, இவை AI-ஓட வாய்ப்புகளையும், அபாயங்களையும் பேலன்ஸ் பண்ணணும்.
இந்தியாவுக்கு முன்னாடி இருக்கிற வாய்ப்பு ரொம்ப பெரிசு. 2027-க்குள் இந்தியாவோட AI மார்க்கெட் $17 பில்லியனாக (1.42 லட்சம் கோடி ரூபாய்) மூணு மடங்கு வளரலாம்னு கூறப்படுது. ஆனா, இதுக்கு நம்ம இளைஞர்கள் AI டூல்ஸ், நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராம்ப்ட் இன்ஜினியரிங், Retrieval-Augmented Generation (RAG) மாதிரியான புது ஸ்கில்ஸை கத்துக்கணும். இல்லைனா, 82% ப்ரொஃபெஷனல்ஸ் AI-னால வேலை இழக்கலாம்னு Hero Vired-ஓட ரிப்போர்ட் எச்சரிக்குது. இந்த ஸ்கில்ஸ் கத்துக்கறது இப்போ எளிது – Google-ஓட ஃப்ரீ AI கோர்ஸ்கள், Coursera, Udemy மாதிரியான ஆன்லைன் பிளாட்ஃபார்ம்ஸ் இதுக்கு உதவுது.
AI-னால வேலைகள் போயிடும்னு பயப்படறத விட, அதை ஒரு கேடலிஸ்ட்டா யூஸ் பண்ணி, இந்தியாவோட இளைஞர்கள் உலக மார்க்கெட்டுல ஜொலிக்கணும். இந்த ரிப்போர்ட் ஒரு விழிப்புணர்வு – இப்போ ஆரம்பிச்சா, 2030-ல இந்தியா AI-ல உலகளவுல முன்னணியில இருக்கலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடக் கூடாது!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.