மெட்ரோ ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்....!

மெட்ரோ ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்....!
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ 2 ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில்  ஓட்டுநர் இல்லாத  சிக்னல் மூலம் இயங்கும் தானியங்கி முறையிலான ரயில்களை  இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சிக்னல், கட்டுப்பாடு மற்றும் காணொலி மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது‌.

 பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 2 ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு சிறப்பு வசதிகளை மேற்கொள்ள உள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது..

அந்த வகையில் பயணிகளின் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் இருக்கும் என்பதால், ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் குறைந்தது நான்கு சார்ஜிங் பாயிண்டுகள்
(Charing point)அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .ஆனால், சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com