வரலாற்றில் முதல்முறையாக பல மாற்றங்களுடன் புதிய மாடல் ஃபோன்கள்..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லாஞ்ச்..! .

வரலாற்றில் முதல்முறையாக  பல மாற்றங்களுடன்  புதிய  மாடல் ஃபோன்கள்..!  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லாஞ்ச்..! .

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய தினம் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட உள்ளது. ஆப்பிள் வரலாற்றிலேயே முதல்முறையாக இதில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த நிகழ்வில் ஆப்பிள் தனது அடுத்து வரும் சாப்ட்வேர்கள் மற்றும் கருவிகள் குறித்தும் முக்கிய தகவல்களை ஆப்பிள் பகிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தையும் தாண்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 மாடல்கள் இன்று வெளியாக இருக்கிறது. இன்றைய நிகழ்வில் எதை நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஐபோன்: இந்த நிகழ்வின் முக்கியமான எதிர்பார்ப்பே ஐபோன் 15. உலகமே எதிர்பார்க்கும் ஐபோன் 15இல் 4 புதிய மாடல்களை ஆப்பிள் வெளியிட உள்ளது. ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்று மொத்தம் 4 மாடல்கள் வெளியாக உள்ளது. வழக்கமான ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் அலுமினியம் பிரேம்களை கிளாஸ் பேக்கையும் கொண்டிருக்கும். அதேநேரம் ஐபோன் மேக்ஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களைக் கொண்டிருக்கும்.

மேலும், ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் மாடல்களில் கடந்தாண்டின் ஏ16 பயானிக் சிப் இருக்கும். அதேநேரம் மேக்ஸ் மாடல்கள் அதிநவீன ஏ17 பயானிக் சிப் இருக்கும். கடந்த ஆண்டின் விலைக்கு இணையாகவே இந்தாண்டும் ஐபோன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய மாற்றம்: இந்த ஐபோனில் ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக ஒரு முக்கிய மாற்றம் வர போகிறது. அதாவது வழக்கமாக ஐபோன்களில் சார்ஜ் போடத் தனிப் பின் இருக்கும். ஆண்டிராய்டு மொபைல்களில் பயன்படும் டைப் பி அல்லது டைப் சி கேபிள்களில் இருந்து இது வேறுபட்டு இருக்கும்.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து மொபைல்களும் ஒரே சார்ஜிங் முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவிட்ட நிலையில், ஆப்பிள் இந்த முடிவை எடுத்துள்ளது. ஐபோன் ஒன்று டைப் சி போர்ட்டுடன் வருவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

மற்ற சாதனங்கள்: ஐபோன்களுடன் சேர்ந்து இன்றைய தினம் நடக்கும் நிகழ்வில் இரண்டு ஆப்பிள் வாட்ச்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரயஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்டிரா 2 ஆகிய மாடல்கள் இதில் வெளியாக உள்ளது. லுக் அளவில் இவை பார்க்கக் கடந்தாண்டு வெளியான ஆப்பிள் வாட்ச்களை போலத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் உள்ளே பயன்படுத்தப்படும் சிப்களில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com