இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதனால் மக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக இந்தியாவில் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 10 புதிய ரக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.