மேஜிக் இல்லை; AI இல்லை 'காற்றில் பறந்த' டெஸ்லா கார்.. கற்பனையை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் டெக்னாலஜி?

'மேஜிக் காட்டிய மாஸ்க்' ஹேரிபாட்டர் போல பறந்த கார்.. பிரமிக்க வைத்த The Roadster 2 கார்.
மேஜிக் இல்லை; AI இல்லை 'காற்றில் பறந்த' டெஸ்லா கார்.. கற்பனையை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் டெக்னாலஜி?
மேஜிக் இல்லை; AI இல்லை 'காற்றில் பறந்த' டெஸ்லா கார்.. கற்பனையை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் டெக்னாலஜி?TESLA
Published on: 
Updated on: 
1 min read

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. The Roadster 2 கார் கடந்த அக்டோபர் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

பறக்கும் கார் வீடியோவைப் பார்த்த பலரும் முதலில் இது AI-ன் சித்து விளையாட்டாக இருக்கலாம் என்றே நினைத்திருந்தனர். உண்மையில் நாம் ஹேரிபாட்டர் மாயாஜால கதையில் ரசித்துப் பார்த்த, சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் கேள்விப்பட்ட ஒன்றை நிஜ வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது டெஸ்லா.

டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ராக்கெட் மேம்பாடு மற்றும் சோதனை வசதிமையத்தில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது செங்குத்தான சாலையில் 90 டிகிரி வரை தலைகீழாக பயணித்தது.

சாலையின் முடிவில் தலைகீழே சென்று விழும் என எதிர்பார்த்தபோது, திடீரென காரின் பக்கங்களில் இருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறி அதனை நிலைப்படுத்தியது. தரைக்கு அருகில் வந்ததும் காற்றின் நிலைபெற்று நிதானமாக எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் இறங்கியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இத்துடன் The Roadster 2 கார் மற்ற கார்கள் மேல் பல்டி அடிக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

டெஸ்லா வாகனப் பொறியியல் தலைவர் லார்ஸ் மொராவி, இந்த “பறக்கும்” தொழில்நுட்பம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய உந்துவிசைக் கருவிகள் மூலம் சாத்தியமாகிறது என்று கூறியுள்ளார்.

இந்த காரைத் தூக்கி காற்றில் சூழற்றுவதற்கு 600 லிட்டர் அழுத்தப்பட்ட காற்றுடன் 10 உந்துவிசைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற உந்துவிசை கருவிகள் வானில் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் குறிப்பிட்ட திசையில் பயணிக்க உதவும். இன்டர்ஸ்டெல்லார் போன்ற ஹாலிவுட் படங்களில் இதை ஒத்த தொழில்நுட்பங்களைப் பார்த்திருக்கலாம்.

தி ரோட்ஸ்டர் காரின் அடுத்த தலைமுறை காரான Roadster 2, 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல்விளக்கத்திற்குப் பிறகும், அந்த சூப்பர்கார் உடனடியாக விற்பனைக்குக் கிடைக்காது. 2028-ல்தான் உற்பத்திக்கு வரும் என்று மஸ்க் கூறியுள்ளார்.

பறப்பது மட்டுமல்லாமல் இந்த கார் 1 வினாடியில் 0-வில் இருந்து 60 mph அதாவது 96.5 kmph வேகத்தை அடையும் எனக் கூறப்படுகிறது.

டெஸ்லா நிறுவனம் இந்த காருக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. பெர்ஃபார்மன்ஸ் வேரியன்ட்டை முன்பதிவு செய்ய $50,000 (சுமாராக ரூ.47.5 லட்சம்) கட்டணமும், த்ரஸ்ட் வேரியன்ட்டை முன்பதிவு செய்ய $250,000 (சுமாராக ரூ.2.37 கோடி) கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ராக்கெட் வேரியன்ட் இன்னும் முன்பதிவுக்கு வரவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com