ஐடி துறையினருக்கு காத்திருக்கும் ஆபத்து.. AI உங்கள் வேலையைப் பறித்துவிடுமா?

நீங்களும் நானும் தான் நீண்ட கால மற்றும் நிலையான வேலை வாய்ப்புகளை கொண்ட கடைசித் தலைமுறை...
ஐடி துறையினருக்கு காத்திருக்கும் ஆபத்து.. AI உங்கள் வேலையைப் பறித்துவிடுமா?
Published on
Updated on
1 min read

தற்போது உலகம் முழுதும் AI-யின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் இந்த அதீத வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் டிஜிட்டல் நிறுவனங்களின் பணிபுரியும் மனிதர்களின் வேலையை பறிக்குமா? எனும் அச்சம் எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சி பணிச்சுமையை குறைத்து நேரத்தை சேமிக்கிறது என்றாலும், அதனால் புதிதாக வேலை தேடும் அல்லது ஐடி துறைக்கு மாற நினைப்பவர்களை சற்று யோசிக்க வைக்கிறது. இத்தகைய நிலையில் Cognizant நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிக்குமார் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரும்காலங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் இந்தியா வருகை புரிந்த மைக்ரோசாப்ட் இந்தியா & தெற்காசியாவின் தலைவராக புனீத் சந்தோக் மும்பையில் ஒரு நிகழ்வில் உரையாற்றியபோது "பெரும்பாலானவர்கள் செயற்கை நுண்ணறிவு தங்கள் வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது. மேலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு இழப்புக்கு காரணம் செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் மாறும். இந்த தொழில்நுட்பம் வளர்ச்சி, தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்து செயல்படுத்தும்".

மேலும் "AI-யின் பயன்பாடு தொழில்துறை அமைப்பையே மாற்றிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை இறுதிவரை அந்த பணிக்கு பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது மாறி வருகிறது. நீங்களும் நானும் தான் நீண்ட கால மற்றும் நிலையான வேலை வாய்ப்புகளை கொண்ட கடைசித் தலைமுறை. அடுத்த தலைமுறையினர் பலவிதமான தொழில்நுட்பத்தில் வேலை செய்ய நேரிடும். எனவே இந்த AI தொழில்நுட்ப காலத்தில் கற்றல் அவசியம் எனவே புதிய நுண்ணறிவுகளை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

கூகுள் CEO சுந்தர் பிச்சை "AI நன்மைகள் மற்றும் புதிய வாய்ப்புகளை கொண்டுவரும். சில வேலைகள் மாறும் ஆனால் பல வேலைகள் மறைந்துவிடும்" எனவும் குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து " இளைஞர்களே மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். AI கற்றுக்கொள்பவர்களும், அதை மாற்றியமைப்பவர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். AI தொழில்நுட்பம் கற்றல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளை மேம்படுத்தும் என நம்புகிறேன்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவின் இந்த தொழில்நுட்ப புரட்சி அச்சத்தை ஏற்படுத்தினாலும் புதுமை நிகழும்போது புதிய வாய்ப்புகளும் உருவாக்கும் என்பதை நாம் நம்புவோம். மேலும் நம் கற்றல் திறனையும் அதன் அனுபவங்களையும் சரியாக பயன்படுத்துவதால் மட்டுமே நம் பணியை நிலையான வாய்ப்பை நோக்கி நகர்த்த முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com