கூகுளை-யே!! பின்னுக்கு தள்ளிய ஷாட் வீடியோ செயலி...

மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட டிக்டாக் வீடியோ தளம் கூகுளை பின்னுக்கு தள்ளியதாக சர்வேயில் கூறுகின்றனர்.
கூகுளை-யே!! பின்னுக்கு தள்ளிய ஷாட் வீடியோ செயலி...
Published on
Updated on
2 min read

உலகில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை தெரியாதவற்றை தெரிந்துகொள்ளும் முதல் இடம் கூகுள். வெப் ப்ரவுசர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கூகுள் இணையதளம் தான். நமக்கு தேவையானவற்றை உடனுக்குடன் தருவதில் சிறந்து விளங்கி வருகிறது. 

”ஓகே கூகுள்” என்ற மீம்ஸ் மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டது. இப்படி மக்களுக்கும் கூகுளுக்கும் இடையே இணைபிரியாத ஒன்றாக இருக்கிறோம்.  இதனாலேயே நீண்ட காலமாக உலகிலேயே மிகவும் பிரபலமான இணையதளம் என்றாலே அது கூகுள் தான், என்ற அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இப்போது அதை மொத்தமாக மாற்றியமைக்கும் வகையில் ஒரு வீடியோ செயலி முன்னுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி ஐடி செக்யூரிட்டி நிறுவனமான Cloudflare சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கூகுள் இணையதளத்தை விடவும் டிக்டாக் தளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடியோ தளமான டிக்டாக் உலகிலேயே அதிகப்படியான மக்களால் பார்க்கப்படும் ஒரு இணையதளமாக மாறியுள்ளது.

உலகின் முன்னணி ஷாட் வீடியோ தளமாக இருக்கும் டிக்டாக்  2021-ல்  பிப்ரவரி, மார்ச், ஜூன் அதன் பின் ஆகஸ்ட் மாதம் வரையில் முதல் இடத்தில் இருந்ததாக Cloudflare நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் நிறுவனத்தின் கூகுள் இணையதளம் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

எப்படி இந்த குறைந்த காலத்தில் டிக்டாக் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணம்  கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தான். கொரோனா காரணமாக உலகம் முழுவதும் 2 வருடமாக லாக்டவுனில் இருந்து வருகிறது. அந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்கள் பொழுதைக் கழிப்பதற்காக ஷாட் வீடியோ தளமான டிக்டாக் வீடியோக்களைப் அதிகமாக பார்த்து ரசித்ததால் தான் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.

ஆனால், தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்து மக்கள் தங்களது வேலைகளுக்குச் செல்ல துவங்கியதற்குப் பின்பு தான் டிக்டாக் பயன்பாடு பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் யூடியூப், பேஸ்புக் மற்றும் இதர பல தளங்கள் ஷாட் வீடியோ சேவையை அளிக்கும் காரணத்தாலும் டிக்டாக்-ஐ பயன்படுத்துவோரும், பயன்படுத்தும் நேரமும் குறைந்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல், மக்கள் பலர் அதிலேயே பொழுதைக் கழிப்பதாக வந்த சர்ச்சையால் இந்தியாவில் டிக்டாக் செயலியை தடைசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com