இந்தியாவின் mid-range மார்க்கெட்டை பிடிக்க Vivo-வின் Y31t 5G! ரூ.25,999க்கு வரும் இதன் சிறப்புகள் என்ன?

Vivo Y31 5G-யின் 6GB ரேம் (RAM) கொண்ட மாடல் இந்தியாவில் 2025 செப்டம்பரில் ரூ. 14,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது; தற்போது அது ரூ. 27,999 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
Vivo-வின்  Y31t 5G! ரூ.25,999க்கு வரும் இதன் சிறப்புகள் என்ன?
Vivo-வின் Y31t 5G! ரூ.25,999க்கு வரும் இதன் சிறப்புகள் என்ன?AI Generated
Published on
Updated on
2 min read

சீனாவைத் தொடர்ந்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட் ஃபோன் சந்தையாக இந்தியா உள்ளது. குறிப்பாக நடுத்தர (mid-range) ஸ்மார்ட் ஃபோன்கள் அதிகப்படியாக விற்பனையாகின்றன.

இந்த நடுத்தர சந்தையைக் கைப்பற்றுவதில் சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க புதிய லான்ச்சை திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். 'Vivo Y31t 5G' ஸ்மார்ட்போனை அமைதியான முறையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நீடித்திருக்கும் 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 120Hz டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் சந்தைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இந்த போன் மூன்று மாறுபட்ட வேரியண்டுகளில் விற்பனைக்கு வருகிறது:

  1. 4GB RAM + 128GB Storage: ₹25,999

  2. 6GB RAM + 128GB Storage: ₹29,999

  3. 6GB RAM + 256GB Storage: ₹34,999

கிரிம்சன் ரெட் (Crimson Red), கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் சீஷோர் (Seashore Green) ஆகிய மூன்று அழகிய நிறங்களில் கிடைக்கிறது. 'ஃபிளிப்கார்ட்', விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இதை வாங்கலாம்.

அறிமுகச் சலுகையாக எஸ்பிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும்போது ₹1,500 உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

Vivo Y31t 5G
Vivo Y31t 5G

எனினும் இந்த மொபைலின் விலை முன்னதாக ரிலீஸ் ஆன, Vivo Y31 5G-யின் ஆரம்ப விலையை விடக் கணிசமாக அதிகமாக உள்ளது. Vivo Y31 5G-யின் 6GB ரேம் (RAM) கொண்ட மாடல் இந்தியாவில் 2025 செப்டம்பரில் ரூ. 14,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது; தற்போது அது ரூ. 27,999 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Y31t 5G-ன் சிறப்பு அம்சங்கள்!

6.75 இன்ச் HD+ LCD டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. நீடித்த பேட்டரி ஆயுள் மற்றும் ஸ்மூத்தான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் 4nm ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) 5G சிப்செட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான புதிய 'OriginOS 6' சாஃப்ட்வேரில் இயங்குகிறது. இந்த மொபைலின் ஹைலைட்டே 7,200mAh பிரம்மாண்ட பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிதான்.

கேமராவைப் பொருத்தவரையில் பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா + டெப்த் சென்சார் மற்றும் முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்காக 8MP கேமரா உள்ளது. தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் IP68 மற்றும் IP69 தரச்சான்றிதழ்களுடன் வருகிறது.

கூடுதலாக, பக்கவாட்டில் அமைக்கப்பட்ட ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

அதிக பேட்டரி ஆயுளும், தாறுமாறான பயன்பாட்டிற்கு ஏற்ற வலுவான பாதுகாப்பும் (Durability) தேவைப்படும் பயனர்களுக்கு இந்த விவோ Y31t 5G ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com