
யூடியூப், உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு தளமா இருக்குற நிலையில், இப்போ புதுசா AI-ஆல் இயங்குற தேடல் முடிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கு.
யூடியூப் இப்போ பிரீமியம் பயனர்களுக்கு ஒரு AI-ஆல் இயங்குற தேடல் முடிவு கரோசலை அறிமுகப்படுத்தியிருக்கு. இது கூகுளோட AI ஓவர்வியூஸ் மாதிரியான ஒரு அம்சம், இதுல தேடல் முடிவுகளுக்கு மேல ஒரு கரோசல் வருது. இந்த கரோசல், வீடியோக்களோட AI- Generated summarised-களை காட்டுது, இதுல வீடியோவோட முக்கிய பகுதிகள், தலைப்பு, மற்றும் சுருக்கமான விளக்கம் இருக்கும். இப்போ இது ஷாப்பிங், ட்ராவல், அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்துல என்ன பண்ணலாம்னு தொடர்புடைய தேடல்களுக்கு மட்டும் அமெரிக்காவில் கிடைக்குது.
எப்படி வேலை செய்யுது?
நீங்க "நியூயார்க்கில் ஷாப்பிங்"னு தேடினா, இந்த AI கரோசல் உங்களுக்கு தொடர்புடைய வீடியோக்களோட சுருக்கமான விளக்கத்தைக் காட்டுது. வீடியோவை கிளிக் பண்ணாமலே, அதோட முக்கிய உள்ளடக்கத்தை புரிஞ்சுக்கலாம்.
யாருக்கு கிடைக்குது?
இப்போ பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்குது, ஆனா விரைவில் அமெரிக்காவில் சில பிரீமியம் இல்லாத பயனர்களுக்கும் இது விரிவாக்கப்படும். எதிர்காலத்துல எல்லா பயனர்களுக்கும் இது கிடைக்கலாம்னு யூடியூப் சொல்லியிருக்கு.
இதோட நன்மைகள்
வேகமான தேடல் அனுபவம்
AI மூலமா, பயனர்கள் வீடியோவை முழுவதும் பார்க்காமலே அதோட முக்கிய தகவல்களை வேகமா புரிஞ்சுக்கலாம். உதாரணமா, ஒரு ட்ராவல் வீடியோவுல எந்த இடங்கள் முக்கியம்னு உடனே தெரிஞ்சுக்கலாம்.
இது குறிப்பா பயணம், ஷாப்பிங் மாதிரியான தேடல்களுக்கு உதவுது, ஏன்னா பயனர்கள் வேகமா தகவல் தேடுறாங்க.
யூடியூப் சொல்றபடி, இந்த AI அம்சம் கல்வி வீடியோக்களுக்கு பயனர்களை கேள்விகள் கேட்கவும், முக்கிய கான்செப்ட்களை புரிஞ்சுக்கவும் உதவுது. இதனால மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதை பயன்படுத்தி வேகமா கத்துக்கலாம்.
கூகுளோட AI முன்னேற்றம்
இது கூகுளோட AI-ஆல் இயங்குற தேடல் மற்றும் டிஸ்கவரி ஸ்ட்ராடஜியோட ஒரு பகுதி. கூகுள் சர்ச்சில் AI ஓவர்வியூஸ் மாதிரி, இதுவும் பயனர்களுக்கு தேடல் அனுபவத்தை மேம்படுத்துது.
இந்த புது AI அம்சம் பயனர்களுக்கு வசதியா இருந்தாலும், யூடியூப் படைப்பாளர்களுக்கு சில சவால்களை உருவாக்குது.
1. வீடியோ பார்வைகள் குறையலாம்
AI சுருக்கங்கள் வீடியோவோட முக்கிய Content-ஐ சுருக்கமா காட்டுறதால, பயனர்கள் வீடியோவை கிளிக் பண்ணி பார்க்கறது குறையலாம். இதனால படைப்பாளர்களோட பார்வைகள் (வியூஸ்) குறைய வாய்ப்பு இருக்கு.
இதே மாதிரி கூகுள் சர்ச்சில் AI ஓவர்வியூஸ் அறிமுகப்படுத்தப்பட்டப்போ, வெப்சைட்களுக்கு வர்ற ட்ராஃபிக் 96% குறைஞ்சதா TollBit ஆய்வு சொல்றது. யூடியூப்புக்கும் இதே பிரச்சினை வரலாம்னு விமர்சகர்கள் சொல்றாங்க.
2. Engagement குறையலாம்
வீடியோவை பார்க்காமலே தகவல் கிடைச்சா, பயனர்கள் கமெண்ட் பண்ணறது, சப்ஸ்க்ரைப் பண்ணறது, அல்லது லைக் பண்ணறது குறையலாம். இது படைப்பாளர்களோட ரீச் மற்றும் வருமானத்தை பாதிக்கலாம்.
உதாரணமா, ஒரு ட்ராவல் வீடியோவோட AI சம்மரி பயனருக்கு எல்லா முக்கிய தகவல்களையும் கொடுத்துட்டா, அவங்க வீடியோவை ஸ்கிப் பண்ண வாய்ப்பு இருக்கு.
3. வருமானத்துக்கு பாதிப்பு
யூடியூப் படைப்பாளர்கள் பெரும்பாலும் விளம்பரங்கள், சப்ஸ்க்ரிப்ஷன்கள், மற்றும் பார்வைகள் மூலமா வருமானம் ஈட்டுறாங்க. AI Summaries பார்வைகளை குறைச்சா, இவங்களோட வருமானமும் பாதிக்கப்படலாம்.
கூகுள் சர்ச்சில் AI ஓவர்வியூஸ் அறிமுகப்படுத்தப்பட்டப்போ, பப்ளிஷர்கள் மற்றும் வெப்சைட்களுக்கு ட்ராஃபிக் குறைஞ்சு, வருமானம் பாதிக்கப்பட்ட மாதிரி, யூடியூப்பிலும் இதே நிலைமை வரலாம்னு கவலை இருக்கு.
கூகுள் சர்ச்சில் AI ஓவர்வியூஸ் அறிமுகப்படுத்தப்பட்டப்போ, சில தவறான தகவல்கள் வந்தது. உதாரணமா, "பீட்ஸாவுக்கு க்ளூ (பசை) சேர்க்கலாம்னு" AI ஓவர்வியூ சொல்லிருக்கு. இதனால கூகுள் இந்த அம்சத்தை குறைச்சு, தவறான பதில்களை மானுவலா நீக்க ஆரம்பிச்சது. யூடியூப்பிலும் இந்த மாதிரி பிரச்சினைகள் வரலாம்னு விமர்சகர்கள் எச்சரிக்கறாங்க.
இந்த AI அம்சம் எல்லா பயனர்களுக்கும் விரிவாக்கப்பட்டா, யூடியூப் தேடல் அனுபவம் மேலும் மேம்படும். ஆனா, தவறான சுருக்கங்கள் அல்லது முக்கிய தகவல்கள் தவறுதலா விடுபடுதல் மாதிரியான பிரச்சினைகள் வரலாம். கூகுளோட Gemini மாடல்கள் இந்த அம்சத்தை இயக்குறதால, இதோட துல்லியம் மற்றும் தரம் மேம்படுத்தப்பட வேண்டியது முக்கியம்.
யூடியூப் படைப்பாளர்கள் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தங்களோட Content-ஐ மாற்ற வேண்டியிருக்கும். உதாரணமா, AI Summarised-களுக்கு பதிலா, பயனர்களை ஈர்க்குற மாதிரி தனித்துவமான உள்ளடக்கம் உருவாக்கலாம்.
கூகுள் இந்த அம்சத்தை மேம்படுத்தும்போது, படைப்பாளர்களோட பார்வைகளையும், ஈடுபாட்டையும் பாதுகாக்கற மாதிரி மாற்றங்கள் கொண்டு வரணும்னு விமர்சகர்கள் சொல்றாங்க.
கூகுளோட AI ஸ்ட்ராடஜி
கூகுள் இப்போ AI-ஐ எல்லா தளங்களிலும் இணைக்கறதுக்கு முயற்சி செய்யுது. யூடியூப்போட இந்த AI தேடல், கூகுள் சர்ச்சோட AI ஓவர்வியூஸ், மற்றும் Veo 3 AI வீடியோ ஜனரேஷன் மாடல் மூலமா, கூகுள் AI-ஆல் இயங்குற உலகத்தை உருவாக்க முயற்சி செய்யுது. இந்த மாற்றங்கள், கூகுளோட AI முன்னேற்றத்துக்கு ஒரு பெரிய படியா இருக்கு, ஆனா படைப்பாளர்கள் மற்றும் பப்ளிஷர்களோட தேவைகளையும் கவனிக்கணும்.
இந்தியாவில் இந்த அம்சம் இன்னும் அறிமுகப்படுத்தப்படல, ஆனா கூகுள் சர்ச்சில் AI மோடு இந்தியாவில் ஆங்கிலத்துல கிடைக்குது. இந்தியாவில் 92% பேர் AI-ஐ உபயோகிக்கறாங்க, இது உலகளவில் மிக அதிகமான விகிதமா இருக்கு. யூடியூப் AI தேடல் முடிவுகள் இந்தியாவுக்கு வந்தா, இந்திய பயனர்களுக்கு தேடல் அனுபவம் மேம்படும், ஆனா இந்திய படைப்பாளர்களுக்கு பார்வைகள் மற்றும் வருமான பாதிப்பு கவலையை ஏற்படுத்தலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.