
ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே விவசாயம் செய்து வந்த தம்பதி அங்கி ரெட்டி- பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் நடந்த கார் விபத்தில் சிக்கி கணவர் அங்கி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்க்கொண்டு வந்துள்ளார்.
இதற்கிடையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த மனைவி பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் தாய் பத்மாவதி. மகனும் தாயின் விருப்படியே விவசாய நிலத்தில் மறைந்த தந்தையின் சிலையை நிறுவி கோவில் கட்டி கொடுத்துள்ளார்.
அதனைதொடர்ந்து தினமும் கணவரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் மனைவி பத்மாவதி, கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில்
ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். கணவனே கண்கண்டதெய்வம் என்று கோவில் கட்டி பூஜை செய்யும் பத்மாவதியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.