அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை...!

வரைவு வாக்காளர்‌ பட்டியல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் வருகிற 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், அரசியல் கட்சிகளிடம் கருத்துகள் கேட்டறியவும், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் வருகிற நவம்பர் 4 மற்றும் 5, நவம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் வாக்காளர்களுக்கான முகாம் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5 ஆம் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com