ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக தொடங்கியதில் இருந்து அங்கு பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. அப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்க தொடங்கியுள்ளது. பெரும்பான்மையாக ஆப்கன் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபன்கள் அங்கிருந்து ராணுவத்தை விரட்டியடித்துள்ளனர். தாலிபான்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் காஷா ஸ்வான் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கபப்டும் காமெடி நடிகர் நாசர் முகமது மர்மநபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நாசர் முகமது ஆப்கன் முன்னால் காவல்துறையில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தாலிபான்களின் சதி வேலையே என நடிகரின் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதற்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தாலிபான்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில், காமெடி நடிகரான நாசர் முகமதுவை, காருக்குள் வைத்து சிலர் கன்னத்தில் அரையும் காட்சிகள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.