இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளி மீது ஏறி இறங்கிய பேருந்து...பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளி மீது பேருந்து ஏறி இறங்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளி மீது ஏறி இறங்கிய பேருந்து...பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அடுத்த பனித்திட்டு கிராமம் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரபுத்திரன்.  கூலி தொழிளாலியான இவர், நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி நகர பகுதியில் இருந்து புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தவளக்குப்பம் சந்திப்பை தாண்டி சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற காரை முந்த முயன்றுள்ளார் வீரபுத்திரன். அந்த சமயம் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி தவறி விழுந்த அவர் மீது, எதிரே வந்த பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com