மண்ணெண்ணைக்காக 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு !

இலங்கையில் மண் எண்ணை வாங்குவதற்கு வரிசையில் நின்று இருந்தவர் பலியான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மண்ணெண்ணைக்காக 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு !
Published on
Updated on
1 min read

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் நலிவுக்கு ஆளாகி உள்ளனர். பொது மக்கள் பெட்ரோல்,, டீசல், மண் எண்ணை போன்ற எரிபொருட்களை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து இருக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில், வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த நுவரெலியா ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர் பலியானார். உயிரிழந்தவர் தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது.

அவரது உடல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதும் இலங்கையில் எரிபொருளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்து இருக்கும் நிலை நீடிக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com