மதம் மாற்றியதாக ஒரு குடும்பம் மீது தாக்குதல் நடத்திய கும்பல்...

மதம் மாற்றியதாக ஒரு குடும்பம் மீது தாக்குதல் நடத்திய கும்பல்...

கர்நாடக பகுதியில் அண்டை வீட்டாரினை கட்டாய மதம் மாற்றியதாக கூறி ஒரு குடும்பத்தை தாக்கிய சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கர்நாடக மாநிலத்தின் பெலகாவி என்ற மாவட்டம் ஒன்றில் முதலகி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் அக்‌ஷய்குமார் காரகன்கவி என்பவரது வீட்டில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த நிலையில் வலதுசாரி குழுவை சேர்ந்த சிலர் அவரின் வீட்டை முற்றுகையிட்டு பிரார்த்தனையை நிறுத்தக் கோரியுள்ளனர்.இதில் அவர்கள் அக்கம்பக்கதினரை கட்டயா மத மாறுதலுக்கு தூண்டியதாக தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இது குறித்து பாஸ்டர் கொடுத்த புகாரின் பேரில் ஏழு பேர் மீது கட்டபிரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 143 (கலவரம்), 448 (அத்துமீறி நுழைதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 392 (கொள்ளை), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com