எங்கேயும் எப்போதும் படம் ரேஞ்சிக்கு மோதி கொண்ட கேஸ் சிலிண்டர் லாரி - பஸ்...சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!!

எங்கேயும் எப்போதும் படம் ரேஞ்சிக்கு மோதி கொண்ட கேஸ் சிலிண்டர் லாரி - பஸ்...சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!!

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், எதிரே வந்த பேருந்தும் எதிரேதிரே மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது அதே சாலையின் மறுபுறம் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தும் எதிரேதிரே மோதி கொண்டுள்ளது.

லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட கோர விபத்தில்  7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்புக்குழுவினரின் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com