புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்றவர்கள் உயிரிழப்பு!!

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கோவிலுக்கு வழிப்பட சென்றவர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்றவர்கள் உயிரிழப்பு!!
Published on: 
Updated on: 
1 min read

புத்தாண்டையொட்டி மக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வது, பட்டாசு வெடிப்பது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை பகிர்வது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் கோவிலுக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு புத்தாண்டையொட்டி வழிபட ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நெரிசலில் சிக்கிய டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில்  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com