
காதலுக்கு வயதில்லை, கண்ணுமில்லை என அவ்வப்போது யாராவ்து எதையாவது செய்து நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில், வயது மிக அதிகமான இடவேளை கொண்ட பலர் திருமணம் ச்யெது கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை கிளப்பி வரும் நிலையில், திருமணமே ஆகாத 90’ஸ் கிட்சின் மனதை மேலும் வாட்டும் வகையில் ஒரு திருமணம் பிலிப்பைன்சில் அரங்கேறியுள்ளது.
மேலும் படிக்க | ஓம்... ரூமுக்கு வாங்க... கோபத்தில் கொந்தளித்த பிரபாஸ்!
18 வயது சிறுமி, 78 வயது முதியவரை காதல் கொண்டு கரம் பிடித்த செய்தி, தற்போது பெரிதாக பரவி வருகிறது. ஓய்வு பெற்ற விவசாயி ரஷெட் மங்காகோப் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ககாயன் மாகாணத்தில் ஒரு இரவு விருந்தில் ஹலிமா அப்துல்லாவை சந்தித்தார். எந்த ஏற்பாடும் செய்யாமல், முழுமையாக காதல் காரணமாகவே இந்த திருமணம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷெட் இது வரை கட்ட பிரம்மச்சாரியாகவே இருந்த நிலையில், தனது முதல் காதலியாக,ஹலிமா இருந்திருக்கிறார். மேலும், ஹலிமாவிற்கும் இவர் தான் முதல் காதல் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமிய முரை படி இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களது போட்டோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | மனைவி ஒப்புதலுடன் காதலியை திருமணம் செய்த கணவர் தலைமறைவு!