தொடரும்  சாதிய வன்மம்:    மற்றுமொரு  அட்டவணைப் பிரிவு இளைஞர் மீது தாக்குதல்..!

தொடரும் சாதிய வன்மம்: மற்றுமொரு அட்டவணைப் பிரிவு இளைஞர் மீது தாக்குதல்..!

Published on

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் அட்டவணைப் பிரிவு   இளைஞர்கள் தாக்கப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 30 ஆம் தேதி ஆச்சிமடம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர் மாரியப்பன் என்பவரை அவழியாக சென்ற கும்பல் வழிமறித்து ஜாதியை கேட்டு கல்லால் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து,  படுகாயம் அடைந்த நபர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், தன்னைத் தாக்கியவர்கள்  ஊர் பெயரையும் ஜாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாடியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com