மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி!

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி!
Published on
Updated on
1 min read

2019 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. தடுப்பூசிகள், மருந்துகள் என பல கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மருத்துவர்களும், நிபுணர்களும் போராடி வருகின்றனர்.

நாள்தோறும் பலர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டதாகவும், எனவே தொற்றில் இருந்து குணமாகும் வரை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com