சொகுசு கப்பலில் பயணம் செய்த 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை...

மும்பை - கோவா சொகுசு கப்பலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சொகுசு கப்பலில் பயணம் செய்த 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை...
Published on: 
Updated on: 
1 min read

மும்பையில் இருந்துன் கோவாவுக்கு செல்லும் சொகுசு கப்பலில் பணி புரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்தது தொடர்ந்து கப்பலில் உடன் பயணித்த அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த சொகுசு கப்பலில் மொத்தம் என 1471 பேர் பயணிகள் ஆவார்.595 பேர் கப்பலில் பணிபுரியும் பணியாளர்கள் என சொல்லப்படுகிறது.அனைவருக்கும் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள் குறித்து தற்போது வரை எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

கப்பலில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனாவால் பயணிகள் அனைவரும் தனிமையில் உள்ளதாக தெரிவித்தனர்.தற்போது இந்த சொகுசு கப்பலானது மொர்முகவ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.கப்பலில் இருந்து ஒருவரையும் வெளிவிடுவதாக இல்லை என அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com