கலக்கும் கச்சா பாதாம்...! நீங்க பண்ணலையா "கச்சா பாதாம் " பாடல் ரீல்...!

உலகின் எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
கலக்கும் கச்சா  பாதாம்...! நீங்க பண்ணலையா "கச்சா  பாதாம் " பாடல் ரீல்...!
Published on
Updated on
2 min read

இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படி எதாவது ஒரு ட்ரெண்டிங் வீடியோ வந்தால் பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் போன்ற அணைத்து சமூக வலைதள பக்கங்களையும் அது தான் ஆக்கிரமித்து இருக்கும்.அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். 

அந்த வகையில் இப்போது புது வைரலாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது கச்சா பாதாம் பாடல் ரீல். இந்த பாடல் உருவான பின்னணி மிகவும் சுவாரஷ்யமானது. உலக அளவில் வைரல் ஆனா இந்த பாடலுக்கு வெளிநாட்டவர்களும் ரீலிஸ் செய்து வருகின்றனர். இவ்வளவு ஹிட் நடித்துள்ள  இந்த பாடலை, வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேர் கடலை விற்கும் தள்ளுவண்டி வியாபாரி பூபன் பத்தியாகர் தான் அறிமுகம் செய்துவைத்துள்ளார். என்னது,  கடலை விற்கும் வியாபாரியா? என்று தானே யோசிக்கிறீங்க..ஆம், அவர் தனது கடலையை விற்பதற்காக மக்களை ஈர்க்கவும், வேலையில் அலுப்பு தெரியாமல் இருக்கவும் வித்தியாசமாக பாட்டு பாடி வியாபாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, அவர் பாடிய கச்சா பாதாம் என்ற பாடல் இணையத்தில் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த பாடலை கேட்ட ராப் இசை கலைஞர்கள் ரான் இ மற்றும் பிரக்யா தத்தா இருவரும் அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு, பாடலின் உண்மையான பாடகரான பூபன் பத்தியாகரை வைத்தே  கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங்கை உருவாக்கி இணையத்தில் வெளியிட அது மாபெரும் வைரலானது. அந்த பாடலைப் போலவே அந்த பாடகர் பூபன் பத்தியாகரும் உலகம் முழுக்க மிகப் பெரும் பிரபலம் ஆகிவிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான இந்த பாடல் இன்ஸ்டாங்க்ராமில் நூறு மில்லியன் பேருக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. யூ டியூப்பில் கிட்டத்தட்ட அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்த கச்சா பாதம் என்ற பாடல் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com