திருமணத்திற்கே லேட்டா வந்த மணமகன்... மாறி மாறி சண்டையிட்டு கொள்ளும் மணமக்கள்...வைரலான வீடியோ!!

மேடைக்கு மணமகன் லேட்டா வந்ததால் கடுப்பின் உச்சத்திற்கே சென்ற மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கே லேட்டா வந்த மணமகன்... மாறி மாறி சண்டையிட்டு கொள்ளும் மணமக்கள்...வைரலான வீடியோ!!
Published on
Updated on
1 min read

சமீப காலமாகவே திருமண மேடையில் மண மகனுக்கும் மண மகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.  இதனால் மணமேடை வரைக்கும் வந்து சில பேருடைய திருமணம் நின்றுள்ளது. ஒரு சில இடத்தில் மணமகளின் கன்னத்தில் மணமகள் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள் என்றெல்லாம் செய்திகளில் படித்திருக்கிறோம். இதேபோன்று ஒரு சம்பவம் தான் தற்போது ஒரு மணமேடையில் நிகழ்ந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசமாக மணமகன், மணமகள் இருவரும் செல்லமாக சண்டையிட்டு கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமண விழாவில் மணமகனும் மணமகளும் மேடையில் வைத்து மாலை மாற்றும் சடங்கு நடைபெற இருந்தது.  ஆனால் மணப்பெண் மட்டும் மாப்பிள்ளை இல்லாமல் தனியாக மேடையில் வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு மாப்பிள்ளை எங்கே என்று பார்த்தால்,   ஊர்வலம் மிகவும் தாமதமாக வந்ததால் மணமகன் லேட்டாக வந்துள்ளார். இதனால் கடுப்பான மணமகள் மிகவும் கோபத்துடன் மாப்பிள்ளையை பார்த்து முறைத்துள்ளார்.

இந்நிலையில் மணமகளை சமாதானம் படுத்துவதற்காக மணமகன் இனிப்புகளை ஊட்ட, ஆனா அவரோ இனிப்புகளை தூரமாக வீசுயுள்ளார். மணமகனும் மணமகளின் செயலை கொண்டு மிகுந்த கோபம் அடைகிறார். அடுத்ததாக  மணமகள் ஒரு கிளாசில் பால் அளிக்க முயலும் போது, மணமகன் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் செம எரிச்சல் அடைந்த மணமகள் டம்பிளரை தூக்கி எரிந்துவிட்டார். இவ்வாறு மேடையில் மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் செல்லமாக கோபித்துக்கொண்டு  சண்டைபோடும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com