நேபாளத்தில் மாயமான விமானம்...! கோவாங் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்..!

நேபாளத்தில் மாயமான பயணிகள் விமானம் கோவாங் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
நேபாளத்தில் மாயமான விமானம்...! கோவாங் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்..!
Published on
Updated on
1 min read

நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமாகியது. விபத்துக்குள்ளான விமானத்தில் நான்கு இந்தியர்கள்  தவிர, இரண்டு ஜெர்மனியர்கள் மற்றும் 13 நேபாள பயணிகள் இருந்தனர். காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் வான்வழியாகவும், ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரைவழி வழியாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் பனிபொழிவு மிகுதியாக இருந்ததால் தேடுதல் பணி நேற்று மாலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வானிலை சீரடைந்துள்ளதால் மாயமான விமானத்தை தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் விமானம் கோவாங் அருகே விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்து நெருங்கியுள்ளதன் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com