இறந்ததாக கூறி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் உயிருடன் இருந்ததால் பரபரப்பு!

இறந்ததாக கூறி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் உயிருடன் இருந்ததால் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

சீனாவின் ஷாங்காய் நகரில், இறந்து விட்டார் எனக்கூறி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்யாமல், பிணவறை கொண்டு செல்லும் பையில் வைத்து கொண்டு சென்றுள்ளனர்.

முதியவர் உடலை பிணவறைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, அவர் உயிருடன் இருந்தது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com