
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 525 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 60 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், சுப முகூர்த்த நாளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளதுடன், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை காட்டி வருவதால், நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த 17ம் தேதியில் இருந்து வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.