இருப்பா... காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்!

இருப்பா... காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்!

ஆட்டோமேடிக் கியர் கொண்ட காரை கவனக்குறைவாக ஒட்டியதால் கார் கட்டுப்பாட்டை கடையில் மோதிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  

சூலூர் பகுதி சேர்ந்தவர் சூரியகுமார். இவரது தந்தை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை கான சூரிய குமார் அவரது குடும்பத்தினருடன் சிங்காநல்லூர் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரேக்கிற்கு பதிலாக, காரில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கார் கட்டுப்பாட்டை  இழந்து சாலையோர கடைகளில் புகுந்து உள்ளது. இதில் கார் அங்கிருந்த கடைக்கு முன்பு இருந்த இபி ஜங்ஷன் பாக்ஸில் மோதி அந்தரத்தில் நின்றது. காரின் வேகத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஒடியுள்ளனர்.

நல்வாய்ப்பாக சாலையில் சென்ற பொதுமக்கள் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. எனினும், காரில் பயணம் செய்த ஒரு பெண் சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com