தூத்துக்குடியில் திடீரென்று 40 அடி தூரம் உள்வாங்கிய கடல்; மக்கள் அதிர்ச்சி...!

தூத்துக்குடியில்  திடீரென்று 40 அடி தூரம் உள்வாங்கிய கடல்;  மக்கள் அதிர்ச்சி...!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில்  இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது.  நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும்.இங்கு ஏராளமானமீனவ கிராமங்கள் உள்ளன.

தூத்துக்குடி கடல்பகுதி மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் சிறியவகையான படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தொழில்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி புதிய துறைமுகம் சாலையில் உள்ள கடல் பகுதியானது உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 40-அடி தூரத்திற்கு மேல் கரையில் இருந்து உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் மீனவர்கள் கடல் மேல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கரைதட்டி நின்றது. 

இதனால் புதிய துறைமுகம் சாலையில் சென்ற பொதுமக்கள் திடீரென கடல் உள்வாங்கியதைகண்டு அதிர்ச்சியடைந்தனர். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் கடல்கள் சீற்றத்துடனும், கடல் உள்வாங்கி காணப்படுவதும் இயல்பான ஒன்றுதான். எனவே, இதனை கண்டு பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com