ரசாயனம் தெளித்து வாழைப்பழங்களை பழுக்க வைக்கும் அவலம்...

மத்தூர் பேருந்து நிலையத்தில் ஊழியர் ஒருவர் திறந்த வெளியில் ஸ்பிரே மூலமாக தெளிக்கும் சம்பபவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரசாயனம் தெளித்து வாழைப்பழங்களை பழுக்க வைக்கும் அவலம்...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பஸ் நிலையத்தில் பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நேரடியாக திருப்பத்தூரில் இருந்து பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு ஓல்சேல்  முறையில் விற்பனை நடைபெறுகிறது. இதனால் இங்கு சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த வியாபாரிகள்  இங்கு  வந்து பழங்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் இங்கு பழங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இங்கு அதிகமாக வாழை தார்கள் வருகின்றனர்.  இந்த வாழைத்தார்களை பழுக்க வைக்க மத்தூர் பஸ் நிலையத்திலேயே இரசாயன ஸ்பிரே அடிக்கும் ஊழியரின் செயல் பாட்டை சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கைக்கு மாறாக வாழைத் தார்களை பழுக்க வைக்க இரசாயன ஸ்பிரே அடித்து. வாழைப்பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த பழங்களை உன்பதால் மனிதர்களுக்கு உடல்  உபாதைகள் ஏற்படும் என்று தெரிந்தும்  வாழைகளுக்கு பழங்களை பழுக்க வைக்க 'எத்தனால்' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலை மத்தூர், போச்சம்பள்ளி பகுதிகளில்  தெடர் கதையாக உள்ளது. எனவே இதுபோல் ஸ்பிரே மூலம் மத்தூர் பேருந்து நிலையத்தில் திறந்தவெளியில் ரசாயனம் தெளிக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோல் செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் வெங்கடேசன் அவர்களிடம் கேட்ட பொழுது ஸ்பிரே மூலம் ரசாயனம் கலந்து மருந்து தெளிப்பது மிகப்பெரிய தவறு இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com