"கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கூல் அல்ல" - Gen Z வீராங்கனையின் அட்வைஸ்!

ஜந்தார் மந்தர் பதாகைகள் இளைஞர்களின் துள்ளல், எள்ளல்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இதில் ஆங்கில கெட்ட வார்த்தைகள் சரளமாக இடம் பெற்றிருந்தது கவலையை எழுப்பியது.
"கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கூல் அல்ல" - Gen Z வீராங்கனையின் அட்வைஸ்!
"கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கூல் அல்ல" - Gen Z வீராங்கனையின் அட்வைஸ்!Manu Bhaker
Published on
Updated on
2 min read

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP), ஜென் சி இளைஞர்களுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்தப் போராட்டம் இன்றைய ஜென் சி இளைஞர்கள் குறித்து பல விவாதங்களை எழுப்பியது. அவற்றுள் முக்கியமானது இளைஞர்களின் மொழிப் பயன்பாடு பற்றியதாகும்.

போராட்டப் பதாகைகள் வீரத் தீரம், நியாயம், தர்மம், உரிமைக் குரல்கள் ஆகியவற்றைக் கடந்து மீம்களாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும் நிறைந்திருந்தன. அந்தப் பதாகைகள், சராசரி ஜென் சி-யின் இன்ஸ்டாகிராம் உள்ளடக்கங்களைப் போலவே காட்சியளித்தன.

Jantar Mantar protest
Jantar Mantar protest

இது இளைஞர்களின் துள்ளல் மற்றும் எள்ளலின் வெளிப்பாடாக இருந்தாலும், அதில் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் சரளமாக இடம்பெற்றிருந்தது கவலையை எழுப்பியது.

இளம் வயதில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற துப்பாக்கி சூடு வீராங்கனை மனு பாக்கர், "மோசமான வாரத்தகைக்கைப் பயன்படுத்துவது கூலான விஷயம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள எக்ஸ் தள பதிவில், "நாம் தேர்ந்தெடுக்கும் மொழி நமது ஆளுமையையும், நாம் எப்படிப்பட்டவர் என்பதையும் பிரதிபலிக்கிறது. உங்கள் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுங்கள், ஏனெனில் காலப்போக்கில் நீங்கள் நினைப்பது, பேசுவது மற்றும் பயிற்சி செய்வதன் விளைவாகவே ஆகிறீர்கள்.

கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கூல் அல்ல. திட்டுவது கூல் அல்ல.

“கூல்” என்பதன் வரையறையை எளிமையாக வைத்துக்கொள்வோம்: கடின உழைப்பு, அன்பு, மற்றவர்கள் மற்றும் தன்னை மதித்தல், நேர்மையின் மூலம் வெற்றி பெற முயற்சித்தல், மற்றும் உங்கள் பெற்றோர் மற்றும் நாட்டைப் பெருமைப்படுத்துதல்.

இதுதான் கூல்.

கடந்த சில ஆண்டுகளில் திட்டு வார்த்தைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது மாறிவிட்டது என்பதால்தான் இதைப் பற்றி பேசுகிறேன். பலருக்கு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது, அது கூட “கூல்” என்று கருதப்படுகிறது. உணராமலேயே மக்கள் அன்றாட உரையாடல்களில் இழிவான மற்றும் மரியாதையற்ற மொழியைப் பயன்படுத்துகிறார்கள்." என அட்வைஸ் செய்துள்ளார்.

மனு பாக்கரின் பதிவு எந்த ஒரு சம்பவத்தையும் அல்லது கூட்டத்தையும் முதன்மைப்படுத்தவில்லை என்றாலும் ஒரு ஜென் சி வீராங்கனை ஆபாசமான மொழி குறித்து கவலையை எழுப்பியுள்ளது அரசியல் களத்திலும் பொருத்தி கவனிக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com