கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு ஆட்டோ- நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்.....

நெல்லை மாவட்டம் மானூர் அருகே கட்டுபாட்டை இழந்த மினி லோடு ஆட்டோ விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய முதியவரின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாக பரவிவருகிறது.
கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு ஆட்டோ-  நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்.....
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் மானூர் பகுதி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய கிராமபகுதிகளில் ஒன்று இந்த பகுதியை கடந்து தான் நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லமுடியும். இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் அதிகளவில் கனரகவாகனங்கள் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மானூர் தெற்குபல்க் வளைவு அருகே முதியவர் ஒருவர் சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்தபோது அதிகவேகமாக வந்த மினி லோடு ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி  முதியவரை இடிக்கவந்தது. இந்த விபத்தில் இருந்து  நூலிலையில் முதியவர் தப்பிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாலையில்  வந்த மினி லோடு ஆட்டோவின் மீது லாரி இடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். சாலை விரிவாக்கம் செய்த சூழல் காரணமாக இந்த வளைவு பகுதியில் விபத்து அடிக்கடி ஏற்படும் நிலை இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com