
ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் தனது மாடு மற்றும் நாயை ஒன்றாக வளர்த்து வந்துள்ளார். தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் அவரால் மாடு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில், தனது நாயின் கழுத்தில் சங்கிலியால் மாட்டை கட்டி மாடு மேய்க்க அனுப்பி விடுகிறார். நாயானது மாட்டை இழுத்துச் சென்று புல்வெளி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகிறது. இதனை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.