பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை காலால் உதைத்த சிறுவன் கைது...வீடியோவை பகிர்ந்து அதிரடி உத்தரவிட்ட முதல்வர்!

பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை காலால் எட்டி உதைத்த சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை காலால் உதைத்த சிறுவன் கைது...வீடியோவை பகிர்ந்து அதிரடி உத்தரவிட்ட முதல்வர்!
Published on
Updated on
1 min read

பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை 16 வயது சிறுவன் காலால் திரும்ப திரும்ப எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு சிறுவன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சிறுவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். விசாரணையில், சிறுவன் தும்கா மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதும் 9 ஆம் வகுப்பு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் மாணவியை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com