தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கிய யானை...நடந்தது என்ன?

தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கிய யானை...நடந்தது என்ன?
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் குருவாயூரில் திருமண போட்டோ சூட் கிடையே திடீரென மிரண்ட யானை தும்பிக்கையால் பாகானை தலைகீழாக தூக்கும் காட்சி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

போட்டோ சூட் நடத்திய மணமக்கள்: 

கேரளா மாநிலம் குருவாயூர் கோவிலில் நேற்றைய தினம் நிகில், அஞ்சலி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்பு கோவில் வளாகத்துக்குள் வைத்து அவர்கள் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கோவில் சம்பந்தப்பட்ட சடங்குகளுக்காக கோவிலுக்கு சொந்தமான யானையை அழைத்து வந்துள்ளனர். அப்படி அழைத்து வரும்போது திடீரென மிரண்ட யானை தன்னுடன் நடந்து வந்த  பாகனை தும்பிக்கையால் தலைகீழாக தூக்கி உள்ளது. சரியான நேரத்தில் யானையின் மீது இருந்த மற்றொரு பாகன் எடுத்த துரித நடவடிக்கையால் யானை சிறிது நேரத்தில் அமைதியானது.

வைரலாகும் வீடியோ:

இதனால் யானையின் பின்னால் போட்டோ சூட் எடுத்துக்கொண்டிருந்த மணமக்களும், யானை பாகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com