லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை...மகனின் உடலை மீட்பதற்கு வீடு வீடாக யாசகம் கேட்ட தம்பதியின் வீடியோ வைரல்...!

பீகாரில், லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனையில் இருந்து மகனின் உடலை மீட்க தம்பதி யாசகம் எடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை...மகனின் உடலை மீட்பதற்கு வீடு வீடாக யாசகம் கேட்ட தம்பதியின் வீடியோ வைரல்...!
Published on
Updated on
1 min read

பீகாரை சேர்ந்த முதிய தம்பதியின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  சமஸ்திபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் முதிய தம்பதி சடலத்தை வாங்க சென்ற நிலையில், அங்கிருந்த ஊழியர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தம்பதி, மகன் உடலை வாங்குவதற்காக அங்குள்ள தெருக்களில் வீடு வீடாக யாசகம் எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com