பாதியில் பழுதாகி நின்ற ராட்டிணம்...5 நிமிடங்கள் தலைகீழாக தொங்கிய பயணிகள்...வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் இயந்திர கோளாறால் பழுதாகி நின்ற ராட்டிணத்தில் 5 நிமிடங்களுக்கு தலைகீழாக தொங்கிய பயணிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாதியில் பழுதாகி நின்ற ராட்டிணம்...5 நிமிடங்கள்  தலைகீழாக தொங்கிய பயணிகள்...வைரலாகும் வீடியோ!
Published on
Updated on
1 min read

கேளிக்கை பூங்கா என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம் தான். ஆனால் சில நேரங்களில் இது பேராபத்தில் முடிவதும் உண்டு. இருந்தும் வாழ்க்கையில் திகிலான அனுபவத்தை விரும்புபவர்கள் இதற்கு விதி விலக்காக உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரத்தில் கேளிக்கை பூங்கா ஒன்றில் 360 சுழலும் ராட்டிணம் இயந்திர கோளாறு காரணமாக நடுவானில் சிக்கி நிற்க அதில் பயணித்த பயணிகள் சுமார் 5 நிமிடங்களுக்கு தலைகீழாக தொங்கியபடி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com