புகார் அளிக்க வந்தவரை மதுபோதையில் திட்டிய தீயணைப்புவீரர்.....

புகார் அளிக்க வந்தவரை மதுபோதையில் திட்டிய தீயணைப்புவீரர்.....

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மதுபோதையில் இருந்த தீயணைப்பு வீரர், புகார் அளிக்க வந்த நபரை தகாத வார்த்தையில் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Published on

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு  செல்லும் சாலையில் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது இந்த  தீயணைப்பு நிலையத்தில் மூங்கில்பாடியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் இரண்டு ஆண்டுகளாக  தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.

மதுவின் மீது அதிக நாட்டம் கொண்ட இவர்,  எந்நேரமும் குடித்துவிட்டு மது போதையில் தான் பணி செய்து வருகிறார்  என குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்துள்ளது. இதற்கிடையில் தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த ஒருவரை அனாகரிகமாகவும்,ஆபாசமான வார்த்தைகளிலும்  தீட்டி அசிங்கப்படுத்தி பேசியுள்ளார் தீயணைப்புவீரர் அண்ணாமலை.

இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் தீயணைப்பு நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளிக்க நினைக்கும் பொதுமக்கள் பெரும் அச்சப்படுகின்றனர். இதுபோன்ற குடிப் பழக்கத்தில் இருக்கும் தீயணைப்பு வீரர் ஐ பணி நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com