மணமேடையில் வானை குறி வைத்து சுட்ட மணமகள்...பீதியில் மணமகன்...வைரலாகும் வீடியோ!

மணமேடையில் வானை குறி வைத்து சுட்ட மணமகள்...பீதியில் மணமகன்...வைரலாகும் வீடியோ!
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகள் துப்பாக்கியை மேலே பிடித்தபடி, வானை நோக்கி 4 முறை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது, நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து உள்ளார். அதனை வாங்கிய மணமகள், துப்பாக்கியை மேலே பிடித்தபடி, வானை நோக்கி 4 முறை சுடவே, அருகில் இருந்த மாப்பிள்ளையோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நடக்கிறதென்றே புரியாமல் பீதியில் அமர்ந்திருந்தார். 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், போலீசார் மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆனால், மணமகளோ விவரமாக தலைமறைவாகியதால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com