பாஸ் பசிக்குதுல... முதல்ல சாப்பாட்ட போட்டுட்டு அப்புறம் மொபைல்ல நோண்டுங்க...புத்திசாலி நாயின் க்யூட் வீடியோ

முதலில் எனக்கு உணவை வைங்க...
பாஸ் பசிக்குதுல... முதல்ல சாப்பாட்ட போட்டுட்டு அப்புறம் மொபைல்ல நோண்டுங்க...புத்திசாலி நாயின் க்யூட் வீடியோ
Published on: 
Updated on: 
1 min read

பொதுவாக செல்லப்பிராணி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது நாய் தான். அப்படிதான் இன்றளவும் செல்லப்பிராணியாக பலரும் நாயை தங்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். அதேபோன்று தன்னை வளர்க்கும் உரிமையாளர்களின் மீது நாய்களும் மிகுந்த அன்பு வைத்திருக்கும்.

அவ்வப்போது வீட்டில் வளர்க்கும் நாய்கள் மனிதர்களிடம் பழகுவதால் என்னவோ தெரியவில்லை மனிதர்களிடம் இருக்கும் குணா அதிசயங்கள் அனைத்தும் நாய்களிடம் காணலாம். அதுமட்டுமில்லாமல் மனிதர்கள் போன்று புத்திசாலி தனமாகவும் செயல்படும்.

அப்படி தான் இங்கு ஒரு வளர்ப்பு நாய் சாப்பாட்டிற்காக தட்டை தன் வாயில் கவ்விக்கொண்டு ஓடிவரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நாயின் உரிமையாளர் தன் வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு சாப்பிட அமர்ந்துள்ளார். அப்போது அந்த நாய் தான் வழக்கமாக சாப்பிடும் தட்டை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓடிவந்தது. முதலில் தனக்கு உணவை வைக்கச் சொல்லி அது சத்தமும் எழுப்பிக்கொண்டிருந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com