மணமேடையில் மணமகனும் மணமகளும் கோபத்தில் மாற்றி மாற்றி பொருட்களை தூக்கி வீசிய வீடியோ காட்சி...!

திருமணம் முடிந்து மணமேடையில் மணமக்கள் நிற்கும் போது, ஐயர் கொடுத்த இனிப்பினை மணமகன் மணமகளுக்கு கொடுக்கின்றார். ஆனால் மணமகளோ அதனை வாயில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென கோபத்தில் தூக்கி வீசி விடுகின்றார்
மணமேடையில் மணமகனும் மணமகளும் கோபத்தில் மாற்றி மாற்றி பொருட்களை தூக்கி வீசிய வீடியோ காட்சி...!
Published on
Updated on
1 min read

வாழ்க்கையில் மிகவும் மகழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படுவது திருமணம். திருமண வீடு என்றாலே அங்கு நிறைய கலாட்டாக்கள், சண்டைகள், நகைச்சுவை நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. அது போல ஏதாவது ஒரு சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் போட அது தாறுமாறாக வைரல் ஆகும். அதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 

இங்கு திருமணம் முடிந்து மணமேடையில் மணமக்கள் நிற்கும் போது, ஐயர் கொடுத்த இனிப்பினை மணமகன் மணமகளுக்கு கொடுக்கின்றார். ஆனால் மணமகளோ அதனை வாயில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென கோபத்தில் தூக்கி வீசி விடுகின்றார்.

பின்பு ஐயர் மணமகளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்து அதை மணமகனுக்கு கொடுக்க சொல்ல்கிறார். அதனை மணமகள் மணமகனுக்கு கொடுத்த போது அதனை மணமகனும் தூக்கி வீசி தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார். இந்த வீடியோ  "சில் திதி சில்" என்ற தலைப்புடன் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

இந்த விடியோவை பார்த்த இணையவாசிகள், இந்த திருமணம் அந்த பெண்ணிற்கு பிடிக்காமல் கட்டாயப்படுத்தி செய்வதால் தான் அந்த பெண் இவாறு நடந்து கொள்ள்கிறார் எனவும், திருமணத்தன்றே இவ்வாறு மணமக்கள் சண்டையிட்டுக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CaKL0fjPp2H/?utm_source=ig_web_copy_link

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com