ஆன்லைன் செயலி மூலம் விற்கப்படும் பெண்கள்..

பெண்களை ஏலத்தில் விட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் புல்லிபாய் என்ற செயலியை தடைசெய்துள்ளனர்.
ஆன்லைன் செயலி மூலம் விற்கப்படும் பெண்கள்..
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான் பயங்கரவாதிகள் ஒட்டு மொத்த நாடும் தங்கள் வசமாக்கப்பட்டதாக உத்தரவிட்டது.தலீபான்களின் கீழ் மக்கள் கொண்டுவரப்பட்டதால் அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து உணவு பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்த நிலையில் இருந்து வருகிறதால் மக்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்கள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், அங்குள்ள ஒரு நபர் தனது 10 வயது பெண் குழந்தையை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தில் தன் 5 குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், இவரை போன்ற பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் பாதிக்கு பாதி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பசி பட்டினியுடன் வாடி வருகின்றனர்.தற்போது சமூக ஊடகங்களில் பரிச்சயமான 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக   அறிவிக்கப்பட்டு உள்ளது.‘புல்லிபாய்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவா்கள் ஏல விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைச் சோ்ந்த ‘கிட்ஹப்’ என்ற நிறுவனம், அந்தச் செயலிக்கு சேவை வழங்கி வந்தது. ‘புல்லிபாய்’ செயலி குறித்து டெல்லியிலும் உத்தர பிரதேசத்திலும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல் துறைக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அந்தச் செயலியை கிட்ஹப் நிறுவனம் முடக்கி அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘புல்லிபாய் செயலியை முடக்கியதை கிட்ஹப் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.இணையவழி குற்றங்களைக் கண்காணிக்கும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கைக் குழுவும், காவல் துறையும் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன’ என்றாா். கடந்த ஆண்டு ஜுலையில் ‘சல்லிபாய்’ என்ற செயலியில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாகப் புகாா்கள் எழுந்ததும் அந்த செயலியையும், வலைதளப்பக்கத்தையும் கிட்ஹப் நிறுவனம் முடக்கியது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com