கனடா நாட்டினருக்கான விசாவிற்கு தடை - மத்திய அரசு அதிரடி

கனடா நாட்டவர்கள் இந்தியா வருவதற்கான விசாவை காலவரையன்றி மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். தொடர்ந்து இந்தியத் தூதரை கனடா வெளியேற்றியதை அடுத்து கனடா தூதரையும் டெல்லியில் இருந்து இந்தியா வெளியேற்றியது. இதனால் இருநாட்டு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு குழப்பங்கள் நீடித்து வந்தது.

தொடர்ந்து கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்களும் மாணவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் 2017ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிய மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த ஊரான பஞ்சாப்பின் மோகாவில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில் கனடா நாட்டவர்கள் இந்தியா வருவதற்கான விசாவை காலவரையன்றி மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com