வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு...

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்து  இளம்பெண் உயிரிழப்பு...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ராஜமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். இந்த வீட்டின் மேற்கூரை கடந்த நான்கு வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை சிமெண்ட் வைத்து பூசி, வீட்டின் உரிமையாளர் சீர் செய்தார்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென பெயர்ந்த சிமெண்ட் பூச்சி, அங்கு உறங்கிக் கொண்டிருந்த ராஜமுருகனின் மகள்  பரமேஸ்வரி மற்றும் மகன் சுந்தர் ஆகியோர் மீது விழுந்துள்ளது.  இதில் பரமேஸ்வரி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சுந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com