தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய ஒயின் ஆறு... ஒரு ருசிகர சம்பவம்!!

தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய ஒயின் ஆறு... ஒரு ருசிகர சம்பவம்!!

அணைகள் உடைத்தெறியப்பட்டு ஊருக்குள் வெள்ளம் ஏற்படுவதை மக்கள் கேள்விப்பட்டிருப்பதுண்டு. ஆனால் மது ஆறே ஊரில் ஒடி கேள்விபட்டதுண்டா?

போர்ச்சுகல் நாட்டில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற நகரில் ரெட் ஒயின் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ள 2 டேங்க்-கள் எதிர்பாராத விதமாக உடைந்து போனது. 

இதன் காரணமாக சுமார் 22 லட்சம் லிட்டர் ரெயிட் ஒயின் வெளியேறியது. மிக உயரமான இடத்தில் ஆலை இருந்ததால் வெளியேறிய மதுபானங்கள் அனைத்தும் தெருவில் ஆறு போல பாய்ந்தோடியது. 

இதனால் சாவோ லூரென்சோ டோ பைரோ பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வியப்பில் மூழ்கினர். சுமார் 6 லட்சம் கேலன் ரெட் ஓயினானது குற்றாலம் அருவி தடாகத்தை தாண்டி ஓடுவதைப் போல சீறிப் பாய்ந்தது. 

இதில் வீணாக ஓடிய ஒயினை கணக்கிட்டு கூறுவதானால் ஒலிம்பிக்கில் இருக்கும் நீச்சல் குளத்தை நிரம்பும் அளவுக்கு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த மது அருகில் உள்ள செர்டிமா நதியில் கலப்பதற்கு முன்பாக உடனடியாக விரைந்த  தீயணைப்புத்துறை அதிகாரிகள், தடுப்புகள் அமைத்து விவசாய பகுதிக்கு மாற்றி விட்டனர். 

இது தொடர்பாக ரெட் ஒயின் நிறுவனம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் சேதங்களை சரி செய்வதற்கும் சுத்தம் செய்வதற்கும் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. 

சாராய ஆறே ஓடிக் கொண்டிருக்கிறது என வெறும் பேச்சுக்காக கூறப்படுவதுண்டு. ஆனால் போர்ச்சுக்கல் நாட்டில் நிஜமாகவே ஒயின் ஆறு பாய்ந்து, ஈ எறும்புகளைக் கூட போதையில் மிதக்க வைத்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com