கனடா வரலாற்றில் முதல் பெண் ராணுவ தளபதி நியமனம்

கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடா வரலாற்றில் முதல் பெண் ராணுவ தளபதி நியமனம்

கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய ராணுவ தளபதியாக மூத்த ராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆயுதப்படைகளின் தொழில் சார் நடத்தை மற்றும் கலாச்சாரத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். அத்துடன், கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவையாற்றி வருகிறார். தற்போது, ஜென்னி கரிக்னன் புதிய ராணுவ தளபதயாக நியமித்திருப்பதன் மூலம் கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தககது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com