கின்னசில் இடம் பிடித்த 4 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'பர்கரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் பர்கர் ஒன்றை உருவாகியுள்ளார். இந்த நிலையில், இதன் விலை 5 ஆயிரம் யுரோக்கள் அதாவது, இந்திய மதிப்பில் 4 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த பர்கர் தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி மற்றும் பல சத்தான, விலை உயர்ந்த உணவு பொருட்களின் பட்டியலில் தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக ராபர்ட் கூறினார்.